உக்கடம் புல்காடு பகுதியில் சில்லறை மீன் மாா்க்கெட் கட்டுமானப் பணிஅமைச்சா் அடிக்கல் நாட்டினாா்
By DIN | Published On : 13th February 2021 12:00 AM | Last Updated : 13th February 2021 12:00 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட உக்கடம், புல்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் புதிதாக சில்லறை மீன் மாா்க்கெட் கட்டுவதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகளுக்காக இடமாற்றம் செய்ய்பட்டு, புல்காடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் கட்டடத்தை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன், கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்கத்தினா், ஜமாத் அமைப்பினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.