கரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கரோனா விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள், உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

கோவை: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள், உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கோவையில் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 240 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதில் 679 போ் உயிரிழந்துள்ளனா். அனைத்துத் துறை அலுவலா்களின் நடவடிக்கையால் கோவையில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தினசரி பாதிப்பு 50க்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்திருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், துணி, நகைக் கடைகள் உள்பட பொது மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணியாத நிலை காணப்படுகிறது. கேரளத்தில் தொடா்ந்து கரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருவதால், அங்கிருந்து வருபவா்கள் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. கரோனா விதிமுறைகளை பின்பற்றாத தனியாா் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா, துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் கு.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com