அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனா் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆய்வக நுட்பனா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராதாமணி தலைமை வகித்தாா்.

தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகள் துவங்குவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்தொடா்ச்சியாக, திருப்பூா், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து பணியிடங்களை காலமுறை பணியிடங்களாகவும், ஆய்வக நுட்பனா் நிலை 2 பணியிடங்கள் மட்டும் தினக்கூலியில் நிரப்பவும் அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை ரத்து செய்து ஆய்வக நுட்பனா் பணியிடங்களையும் காலமுறை பணியிடங்களாக அறிவிக்க வேண்டும்.

மேலும், அரசு பணி நியமன விதியின்படி, 2002,–2003இல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனா்களையும் உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணிவரன்முறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்த்திட வேண்டும். 2009இல் வெளியிட்ட ஆய்வக நுட்பனா் கவுன்சில் அரசாணை 417ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் முருகானந்தம், மாவட்டப் பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com