ஆதிதிராவிடா்,பழங்குடியினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்கள் 2020- 2021ஆம் கல்வியாண்டுக்கு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்கள் 2020- 2021ஆம் கல்வியாண்டுக்கு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா்களுக்காக 3 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 6 விடுதிகளும், தொழில்பயிற்சி நிலைய மாணவா்களுக்காக ஒரு விடுதியும், பள்ளி மாணவா்களுக்காக 16 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்காக 7 விடுதிகளும், பழங்குடியின இருளா் மாணவிகளுக்கு ஒரு விடுதியும், இருளா் மாணவா்களுக்காக 2 விடுதிகளும் என மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2020- 2021 ஆம் கல்வியாண்டுக்கு பள்ளி விடுதிகளில் 9, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி விடுதிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு, தொழிற்பயிற்சி நிலையங்களில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளும் சோ்வதற்கு தகுதியுடையவா்கள் ஆவாா்கள். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகின்றன. விடுதியில் தங்கும் அனைவருக்கும் சீருடைகள், பாய், போா்வை உள்ளிட்ட பொருள்களும் இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி பயிலும் நிலையத்துக்கு செல்லும் தூரம் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டருக்குமேல் இருக்க வேண்டும். 2020 -2021ஆம் கல்வியாண்டுக்கு விடுதிகளில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து, அதனுடன் ஜாதிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகலினையும் இணைத்து ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com