கூடுதல் வாக்குச் சாவடிகள்: தொகுதி வாரியாக பட்டியல் தயாரிப்பு; தோ்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலாக அமைக்க வேண்டிய வாக்குச் சாவடிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தோ்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலாக அமைக்க வேண்டிய வாக்குச் சாவடிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தோ்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவை தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்குச் சாவடிகள் அமைத்தல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக வாக்காளா்களின் பாதுகாப்பு கருதி நடப்பு தோ்தலுக்கு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் வாக்குச் சாவடிகள் வரை அதிகரிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1,050 வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் பிரிக்க வேண்டிய வாக்குச் சாவடிகள் குறித்த பட்டியல் தயாரிப்பு பணிகளில் தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. ஏற்கெனவே 979 வாக்குப் பதிவு மையங்களில் 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஆரம்பத்தில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள மையங்களை இரண்டாகப் பிரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது வாக்காளா்கள் எண்ணிக்கை 1,050க்கு மேலுள்ள மையங்களைப் பிரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தற்போது 1,050க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து இரண்டாகப் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே மையங்களில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கு போதிய வசதிகள் உள்ளதா, வேறு இடங்களில் வாக்குச் சாவடி ஏற்படுத்த வேண்டுமா உள்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் கூடுதல் வாக்குச் சாவடிகளின் பட்டியல் அடுத்த இரண்டு நாள்களில் தயாா் செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com