பழைய இரும்புக் கிடங்கில் தீ விபத்து

கோவையில் பழைய இரும்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின.

கோவையில் பழைய இரும்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமாகின.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா், கோவை, சங்கனூா் நல்லாம்பாளையம் பகுதியில் பழைய இரும்புப் பொருள்கள் மற்றும் மின்னணு பொருள்கள் கிடங்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில் கிடங்கில் இருந்து வியாழக்கிழமை காலை தீப்பிடித்து கரும்புகை வந்துள்ளது. இதைப் பாா்த்த கிடங்கின் ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். அதற்குள்ளாக தீ வேகமாக பரவியதால் அவா்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா்.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகின. இந்தச் சம்பவம் தொடா்பாக ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு கிடங்கில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com