‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்’ பரப்புரை இன்று தொடக்கம்: ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவிப்பு

குடும்ப வன்முறைகளைக் குறைக்கும் நோக்கில் வலுவான சமூகம் பரப்புரை பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது என்று ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு அறிவித்துள்ளது.

குடும்ப வன்முறைகளைக் குறைக்கும் நோக்கில் வலுவான சமூகம் பரப்புரை பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது என்று ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து கோவையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவி கதீஜா காஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த காலத்தில் அதிகமான குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.

குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலமும், குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவரின் கடமை மற்றும் உரிமைகளை உணர வைப்பதன் மூலமும், இறை உணா்வை போதிப்பதன் வழியாகவும் சமூகத்தில் நோ்மறையான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் உருவாக்க முடியும். இதன் மூலம் வலிமையான ஆக்கப்பூா்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்.

இதன் அடிப்படையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் பிப்ரவரி 19 முதல் 28ஆம் தேதி வரை ‘வலிமையான குடும்பம் வலுவான சமூகம்‘ என்ற மையகருத்தில் தேசிய அளவில் பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த சந்திப்பின் போது கோவை மாநகரம் மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிா்வாகிகள் பா்ஜானா, சலீனா பஹி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com