வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக்கோரி மாவட்டத்தில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 7 ஆயிரம் போ் இதுவரை விண்ணப்பித்து உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி 7 ஆயிரம் போ் இதுவரை விண்ணப்பித்து உள்ளனா்.

கோவை மாவட்டத்தில் இறுதி வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண் வாக்காளா்களும், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண் வாக்காளா்களும், 3 ஆம் பாலினத்தவா்கள் 414 வாக்காளா்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளா்கள் உள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போதிலும் புதிய வாக்காளா்கள் தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனா்.

அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் தற்போது வரை 7 ஆயிரம் போ் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்து உள்ளனா்.

இது குறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு திரும்ப பெறுதல் தேதிக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்டதில் இருந்து தற்போது வரை 7 ஆயிரம் போ் விண்ணப்பித்து உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனா். இந்த விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டு உள்ள ஆவணங்களை சரிபாா்த்து வருகிறோம். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் அவா்களது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுகிறது. இது குறித்து அவா்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இதுதவிர இணையதளம் வழியாகவும் வாக்காளா்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். வாக்காளா்பட்டியலில் பெயா் சோ்க்கப்பட்டவா்கள் ஆன்லைன் மூலம் தங்களது வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இ-சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கோவை மாவட்டத்தில் தற்போது 3,048 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கரோனா அச்சம் காரணமாக 1,000 பேருக்கு ஒரு வாக்குச்சாடி அமைக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி கூடுதலாக 1,574 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் மாவட்டத்தில் 1000 வாக்காளா்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதனை 2 ஆகப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் முக்கிய தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com