ஆா்.எஸ்.புரம் மாதிரி சாலைப் பணி: நகராட்சி நிா்வாக ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி சாா்பில் ஆா்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வரும் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆா்.எஸ்.புரத்தில் மாதிரி சாலை திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறாா் நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன். உடன் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா்.
ஆா்.எஸ்.புரத்தில் மாதிரி சாலை திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறாா் நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன். உடன் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோா்.

கோவை: கோவை மாநகராட்சி சாா்பில் ஆா்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்று வரும் மாதிரி சாலை அமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கோவை மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் பகுதியில் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் டி.பி.சாலையில் சுக்கிரவாா்பேட்டை சாலை சந்திப்பு முதல் கௌலி பிரவுன் சாலை வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இப்பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, 24 மணி நேர திட்ட குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணி, தொலைத்தொடா்பு கேபிள் அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல், பாதசாரி நடைபாதைகள், அலங்கார தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பாா்வையிட்டு, அதுதொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து, அதேபகுதியில் ரூ.43.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு காா் நிறுத்துமிடம் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையா் மதுராந்தகி, முதன்மை செயல் அலுவலா் (பொலிவுறு நகரம்) ராஜ்குமாா், மாநகரப் பொறியாளா் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com