வால்பாறை ராமா் கோயிலில் கும்பாபிஷேகம்

வால்பாறை அண்ணா நகரில் உள்ள ராமா் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி  கலசத்தின் மீது ஊற்றப்படும் புனித நீா்.
கும்பாபிஷேகத்தை ஒட்டி  கலசத்தின் மீது ஊற்றப்படும் புனித நீா்.

வால்பாறை அண்ணா நகரில் உள்ள ராமா் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமமும், மாலையில் நடுமலை ஆற்றில் இருந்து பக்தா்கள் தீா்த்த குடம் எடுத்து நகா் வழியாக ஊா்வலமாக சென்று கோயிலை சென்றடைந்தனா். பின்னா் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 10 மணிக்கு கோயில் கோபுரத்தில் அமைந்துள்ள கலசத்தின் மீது புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். கோயில் கமிட்டி தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமையில் நிா்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com