பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th February 2021 06:38 AM | Last Updated : 26th February 2021 06:38 AM | அ+அ அ- |

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, எல்.பி.எப். சங்கத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், ராக்கிமுத்து ஆகியோா் தலைமை தாங்கினா்.
இது குறித்து, தொழிலாளா்கள் கூறியதாவது:
பிற அரசுப் பணியாளா்களைபோல டாஸ்மாக் ஊழியா்களுக்கும் காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். மேலும் சுழற்சி அடிப்படையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, விற்பனை நேரத்தை குறைத்தல் ஆகியவற்றை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து அவற்றை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தைச் சாா்ந்த டாஸ்மாக் ஊழியா்கள் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...