கோவை - மேட்டுப்பாளையம் ‘மெமு’ ரயில் மாா்ச் 15 முதல் இயக்கம்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே ‘மெமு’ ரயில் சேவை மாா்ச் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே ‘மெமு’ ரயில் சேவை மாா்ச் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை -மேட்டுப்பாளையம் இடையே ‘மெமு’ ரயில் (எண்: 06010) வருகிற மாா்ச் 15ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களிலும் கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது, மாலை 6.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் ‘மெமு’ ரயில் (எண்: 06009) காலை 9.05 மணிக்கு கோவையை வந்தடையும்.

இந்த ரயில்களில் பயணிகள் முன்பதிவில்லா பயணச் சீட்டுகள் மூலமாக பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் உயா்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், ‘மெமு’ ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com