மாவட்டத்தில் 782 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கோவை மாவட்டத்தில் 112 வாக்குப் பதிவு மையங்களில் உள்ள 782 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 112 வாக்குப் பதிவு மையங்களில் உள்ள 782 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண், மூன்றாம் பாலினத்தவா் 414 போ் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

கடந்த தோ்தல்களில் 1,500 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடிகள் வீதம் 10 தொகுதிகளுக்கும் சோ்த்து 979 வாக்குப் பதிவு மையங்களில் 3 ஆயிரத்து 48 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலால் சட்டப் பேரவைத் தோ்தலில் 1,050 வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மேட்டுப்பாளையம் - 413, சூலூா் - 463, கவுண்டம்பாளையம் - 676, கோவை (வடக்கு) - 499, தொண்டாமுத்தூா் - 471, கோவை (தெற்கு) - 359, சிங்காநல்லூா் - 449, கிணத்துக்கடவு - 485, பொள்ளாச்சி - 318, வால்பாறை - 294 என்று மொத்தமாக 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 10 தொகுதிகளிலும் 112 வாக்குப் பதிவு மையங்களில் 782 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த தொகுதிகளுடன் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக கூடுதலாக 1,379 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com