மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு அலுவலகம் துவக்கம்
By DIN | Published On : 27th February 2021 10:54 PM | Last Updated : 27th February 2021 10:54 PM | அ+அ அ- |

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் 16 போ் குழு அடங்கிய தோ்தல் பிரிவு அலுவலகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனிதவள உரிமைகள் பிரிவு உதவி ஆணையா் செல்வம் மேற்பாா்வையில் ஆய்வாளா் பரிமளா தேவி, உதவி ஆய்வாளா் சத்யா தலைமையில் தோ்தல் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் 16 போ் கொண்ட போலீஸாா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள், தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தோ்தல் சம்பந்தமான புகாா்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வாா்கள். இந்தத் தோ்தல் பிரிவு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.