மருத்துவ சமூக நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்துவோா் நலச் சங்கம் சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்துவோா் நலச் சங்கம் சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்டகஈ தலைவா் சசிகுமாா் தலைமை வகித்தாா். இதில், அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் முடி திருத்தும் தொழில் செய்பவா்களுக்கு சட்டப் பாதுகாப்பு கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து மாவட்ட;ஈ செயலாளா் ஜெயக்குமாா் கூறுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் சில ஆதிக்க பிரிவினா் உள்ளனா். அவா்கள் எங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் அவசியமானதாக உள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுபவா்களுக்கு வரும் தோ்தலில் ஆதரவு அளிப்போம் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கோவை மாவட்டப் பொறுப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com