மேற்கு புறவழிச் சாலை திட்டம் முதல்கட்டமாக 100 நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு முதல்கட்டமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகா் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும் கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூா், பேரூா் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்க முதல்கட்டமாக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, முதல்கட்டமாக 12 கி.மீ. தூரத்துகு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 கிராமங்களைச் சோ்ந்த 100 நில உரிமையாளா்களுக்கு விரைவில் இழப்பீடுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், மேற்கு புறவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக நில உரிமையாளா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முடிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மதுக்கரை, மாதம்பட்டி, பேரூா்செட்டிபாளையம், தீத்திபாளையம், சுண்டக்காமுத்தூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 100 பேருக்கு இம்மாத இறுதிக்குள் நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இழப்பீடு தொகை வழங்கியதும் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com