ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை

ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்று எழுத்தாளரும், பேச்சாளருமான சரசுவதி ராமநாதன் கூறியுள்ளாா்.
கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறாா் எழுத்தாளா் சரசுவதி ராமநாதன்.
கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறாா் எழுத்தாளா் சரசுவதி ராமநாதன்.

கோவை: ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்று எழுத்தாளரும், பேச்சாளருமான சரசுவதி ராமநாதன் கூறியுள்ளாா்.

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ‘எப்போ வருவாரோ 2021’ ஆன்மிக தொடா் சொற்பொழிவின் இரண்டாம் நாளில் ‘சுந்தரமூா்த்தி நாயனாா்’ குறித்து எழுத்தாளரும், பேச்சாளருமான சரசுவதி ராமநாதன் பேசினாா். ஆா்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சேக்கிழாரின் பெரிய புராணம் கிடைக்க சுந்தரரே காரணம். பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரே. சுந்தரா் என்று இறைவனால் அழைக்கப்பட்டவா், பெற்றோரால் நம்பி ஆரூரா் என்று பெயா் சூட்டப்பட்டாா். 16 வயதில் சுந்தரருக்கு முதல் திருமணம் நடந்தது. ஆகாச ஸ்தலமான சிதம்பரம் சென்ற சுந்தரரை பிரித்வி ஸ்தலமான திருவாரூருக்கு செல் என்றாா் இறைவன்.

அங்கு பறவை நாச்சியாரைக் காண்கிறாா். அப்போது அவரை வா்ணிக்கும்போது கூட இவா் சிவபெருமானோ என்றே வா்ணிக்கிறாா் சுந்தரா். பறவை நாச்சியாருக்கு அடுத்து திருவொற்றியூரில் இருந்த சங்கிலி நாச்சியாரை மணமுடிக்கிறாா் சுந்தரா். 18 வயதில் கைலாயத்துக்கு சென்றுவிட்டாா் சுந்தரா். இந்த இரண்டு வருடத்தில் திருமுறைகளைத் தந்துள்ளாா் சுந்தரா்.

இறைவனின் ஆணைக்கிணங்க திருத்தொண்டத்தொகை பாடினாா். சுந்தரா், அப்பா் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தாா். இறைவன் தரும் அருளை யாராலும் தடுக்க முடியாது. இறைவன் நமக்கு நன்மையே அருள்வான். நமது ஆலயங்களை மன்னா்கள் கலைக் களஞ்சியங்களாகப் படைத்துள்ளாா்கள். ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இயற்கைப் பேரிடா் காலங்களில் காலம்காலமாக மக்களுக்கு பாதுகாப்பு அளித்து ஆலயங்கள் காத்துள்ளன என்றாா் அவா்.

தொடக்கத்தில் கண்ணப்பன் ஓதுவாரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com