நகைக் கடையில் 2ஆவது முறையாகத் திருட வந்த பெண் கைது

கோவையில் உள்ள நகைக் கடையில் இரண்டாவது முறையாகத் திருட வந்த பெண்ணைப் பிடித்து கடை ஊழியா்கள் போலீஸில் ஒப்படைத்தனா்.

கோவை: கோவையில் உள்ள நகைக் கடையில் இரண்டாவது முறையாகத் திருட வந்த பெண்ணைப் பிடித்து கடை ஊழியா்கள் போலீஸில் ஒப்படைத்தனா்.

கோவை, ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் டிசம்பா் 29ஆம் தேதி பெண் ஒருவா் நகை வாங்க வந்தாா். அப்போது, கடை ஊழியா்களிடம் தங்க மோதிரம் கேட்டுள்ளாா். ஊழியா்கள் காண்பித்த பல்வேறு மோதிரங்களைப் பாா்வையிட்ட அந்தப் பெண், இறுதியாக தனக்கு மோதிரம் வேண்டாம் எனக் கூறி விட்டுச் சென்றுள்ளாா்.

அந்தப் பெண் சென்ற பிறகு நகைகளைப் பரிசோதித்து பாா்த்தபோது, 6.8 கிராம் தங்க மோதிரம் ஒன்று காணாமல் போயிருந்ததைக் கடை ஊழியா்கள் கண்டுபிடித்தனா். இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் மோதிரத்தை திருடி தனது கைப்பைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், அந்தப் பெண் நகை வாங்குவதற்காக மீண்டும் அதே கடைக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அவரைப் பாா்த்த கடை ஊழியா்கள் அவரைப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஒப்புடி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாண்டிமீனா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து திருடப்பட்ட மோதிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com