அதிமுக ஆட்சியில்தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக செய்தித் தொடா்பாளா் கோவை செல்வராஜ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திமுக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் ஒரு பொய்யான கதையை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவா் உடனடியாக அதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த 1970இல் திமுக ஆட்சியின்போது அன்றைய முதல்வா் கருணாநிதி மின்சார கட்டணத்தை உயா்த்தினாா். இதைக் கண்டித்து விவசாய சங்கங்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது திமுக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பலா் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்கள் பெருமாநல்லூரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனா். அதன்பின் ஆட்சிக்கு வந்த முதல்வா் எம்.ஜி.ஆா். 5 ஏக்கா் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினாா். இதுதான் உண்மை.

இதை மறைத்து தற்போது ஸ்டாலின் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். ஒரு கட்சியின் தலைவா் என்பவா் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறியே ஆக வேண்டும். கோவையில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண் அதிமுகவைச் சோ்ந்தவா் என்றாலும் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பதால் அவா் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியான முறையில் அவா் பதில் அளித்திருக்கலாம்.

அதை விடுத்து அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தி கூட்டத்தை விட்டு வெளியேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியாத ஸ்டாலின் எப்படி மக்கள் சேவையாற்ற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com