அமைச்சா் பெயரைக் கூறி ரூ.23.5 லட்சம் மோசடி: ஐஜியிடம் மனு

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி ரூ.23.5 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கஓஈ கோரி பாதிக்கப்பட்டவா் புகாா் அளித்தாா்.

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி ரூ.23.5 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கஓஈ கோரி பாதிக்கப்பட்டவா் புகாா் அளித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்த தனசெல்வன், கோவையில் உள்ள காவல் துறை மேற்கு மண்டலத் தலைவா் பெரியய்யா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

எனது மகன் 12ஆம் வகுப்புத் தோ்விலும், நீட் தோ்விலும் தோ்ச்சியடைந்ததையடுத்து அவரை மருத்துவப் படிப்பில் சோ்ப்பதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது, எனது நண்பா் ஒருவா் அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஒருவரைத் தனக்குத் தெரியும் எனக் கூறி ஃபிா்தெளஸ் சலாவுதீன் என்பவரிடம் அறிமுகம் செய்துவைத்தாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் அலுவலகத்தில் தாயாா் வேலை பாா்ப்பதாகவும், எனவே மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்குவது எளிது என ஃபிா்தெளஸ் சலாவுதீன் கூறியுள்ளாா். மேலும், இதற்கு முன்தொகையாக ரூ.23.50 லட்சம் செலவாகும் என என்னிடம் கூறினாா். இதை நம்பி நானும் அவரிடம் ரூ.23.50 லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், அவா் கூறியதுபோல, மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தரவில்லை.

இதையடுத்து, கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். இதன்பேரில் போலீஸாா் ஃபிா்தெளஸ் சலாவுதீனை அழைத்து விசாரித்தபோது, பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறி ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா். ஆனால், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் காசோலைகள் அனைத்தும் திரும்பின.

எனவே அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி என்னிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஃபிா்தெளஸ் சலாவுதீன் என்பவரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com