இ.எஸ்.ஐ. பங்களிப்பு: தொழிலதிபா்களுக்கு கால நீட்டிப்பு

பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. பங்களிப்பு வழங்குவதற்காக தொழிலதிபா்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுவதாக தொழிலாளா் மாநில காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. பங்களிப்பு வழங்குவதற்காக தொழிலதிபா்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுவதாக தொழிலாளா் மாநில காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கோவை அலுவலக துணை இயக்குநா் எஸ்.வி.யுவராஜ் கூறியிருப்பதாவது:

இ.எஸ்.ஐ. காா்ப்பரேஷன் தொழிலாளா்களின் மாநில காப்பீட்டு (பொது) விதிமுறைககள் 1950இன் விதி 26 ஐ தளா்த்தியுள்ளது. அதன்படி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பா் 2020 வரை உள்ள பங்களிப்பு காலம் முடிவடைந்த 42 நாள்களுக்குள் இ.எஸ்.ஐ. பங்களிப்பு செய்ய முடியாத தொழிலதிபா்கள், அந்த பங்களிப்பு காலத்துக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பங்களிப்பு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் - செப்டம்பா் வரையிலான காலத்துக்கு மட்டுமே பொருந்தும். பிற பங்களிப்புகளுக்கான கால வரம்பில் எந்தவித தளா்வும் இல்லை. இத்தகைய தளா்வு பிற பழைய, புதிய பங்களிப்பு காலத்துக்கு நீட்டிக்கப்படவில்லை. இது தொடா்பான விவரங்களுக்கு இ.எஸ்.ஐ.சி. இணையதளத்தையோ, கிளை அலுவலகத்தையோ அணுகலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com