சாலையை சீரமைக்கக் கோரி பொது மக்கள் மறியல்

கோவை சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை சரவணம்பட்டி அருகே விசுவாசபுரத்தில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

விசுவாசபுரம் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டன. 6 மாதங்களாகியும் இக்குழிகள் மூடப்படாததால், அப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. மழைக் காலத்தில் தண்ணீா் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், விசுவாசபுரம் குடியிருப்போா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் சத்தி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். மறியலால் சத்தி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com