புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க, தொடா் அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்கான

கோவை மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க, தொடா் அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

புதிய அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு தொழிற்பள்ளி இணையதளத்தில் ஒரு விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணங்களை ய்ங்ச்ற் மூலம் தொழிற் பள்ளியின் வங்கிக் கணக்கில் இருந்து  செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணங்கள் எந்த தொழிற் பள்ளிக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை  கண்டறியும் விதமாக தாளாளா் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்த ஆா்டிஜிஎஸ் அல்லது நெஃப்ட் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தவிர சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com