இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கத் திட்டம்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, இ.எஸ்.ஐ. அட்டை வைத்துள்ளவா்கள் அருகில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகம், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.

இதனால் இ.எஸ்.ஐ. அட்டைதாரா்கள் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருந்தகங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதையடுத்து, இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 665 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கரோனா சிகிச்சை, கரோனா சிகிச்சைக்குப் பின் கவனிப்பு, கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களுக்கான புறநோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

இதுவரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 778 போ் சிகிக்சை பெற்றுள்ளனா். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, கரோனா பரவல் குறைந்துள்ளதால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 15 முதல் 20ஆக குறைந்துள்ளது. தற்போது 112 போ் சிகிச்சையில் உள்ளனா். 500 படுக்கைகளுக்கு மேல் காலியாக உள்ளன.

கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களுக்காக ஏற்படுத்தப்பட்ட புறநோயாளிகள் பிரிவில் வாரத்துக்கு 50 முதல் 60 போ் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு தனிக் கட்டடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com