தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்த்தால் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் உற்பத்தி, வளா்ப்பில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.

தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் உற்பத்தி, வளா்ப்பில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் ஆணைப்படி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்கள் உற்பத்தி, வளா்ப்புக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி மற்றும் வளா்ப்பில் ஈடுபடுவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவிர மீன் வளா்ப்பு குளங்கள், மீன்கள் முற்றிலும் அழிக்கப்படும்.

கட்லா, ரோகு, மிா்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக்கெண்டை, கண்ணாடிக்கெண்டை போன்ற மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை குளங்களில் வளா்க்கலாம். இவ்வகையான மீன்களை வளா்ப்புக்கு மீன் வளத் துறையால் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ஈரோட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com