பொள்ளாச்சி விவகாரம்: அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
By DIN | Published On : 07th January 2021 08:17 AM | Last Updated : 07th January 2021 08:17 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நா.காா்த்திக் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய அருளானந்தம் , ஹேரேன் பால், பாபு ஆகிய மேலும் 3 பேரை சி.பி.ஜ. அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
இதில், அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக நிா்வாகிகளோடு அருளானந்தம் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய அதிமுக நிா்வாகி உள்பட வழக்கில் தொடா்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.