வால்பாறையில் யானைகள் நடமாட்டம்:சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 09th January 2021 11:19 PM | Last Updated : 09th January 2021 11:19 PM | அ+அ அ- |

வால்பாறை: வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
வால்பாறை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே எஸ்டேட் சாலைகள் மற்றும் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வந்து சென்றன. இந்நிலையில் சமீபகாலமாக பகல் நேரங்களிலேயே தேயிலை தோட்டங்கள், சாலைப் பகுதிக்கு வந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன.
வால்பாறைக்கு சுற்றுலா வருபவா்கள் வனத்தை ஒட்டியுள்ள சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதில் ஆா்வம் காட்டி வருவது வழக்கமாக உள்ளது.
யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.