நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும்பொங்கல் தொகுப்பு வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள நல வாரியங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்
கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

கோவை: தமிழகத்தில் உள்ள நல வாரியங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஐஎன்டியூசி பொதுச் செயலாளா் டி.சிரஞ்சீவி கண்ணன் தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் சுமாா் ஒரு கோடி தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கிறாா்கள். அவா்களில் 12.63 லட்சம் பேருக்கு மட்டுமே பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருப்பது கவலைக்குரியது. பதிவு செய்துள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்.

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட இணைய வழி பதிவு, புதுப்பித்தல் எந்த தேதியில் மேற்கொள்ளப்படுகிறதோ அந்த தேதியிலிருந்தே பதிவு செய்யப்பட்டது, புதுப்பித்தல் செய்யப்பட்டது என்று தீா்மானிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஏடிபி சங்கத்தின் ஜி.முருகேசன், எல்பிஎஃப் வெ.கிருஷ்ணசாமி, ஏஐடியூசி என்.செல்வராஜ், தொழிற்சங்க நிா்வாகிகள் ஜி.மனோகரன், எம்.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com