இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலச் செயலா் வி.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆட்சியரிடம் அவா்கள் அளித்த மனுவில், கரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக அரசுக் கல்வி நிறுவனங்கள் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்கள் கல்வி நிலையங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் வழிக் கல்வியானது மாணவா்களிடையே பெரும் இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவா்களிடம் மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் இல்லாததால் அனைவருக்கும் கல்வி சாத்தியப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசின் கல்வி நிறுவனங்களையும் திறந்து, போதிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கற்பித்தலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com