கோவையில் ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்

கோவையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனை உள்பட 10 மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனை உள்பட 10 மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் கடந்த வாரங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 10 மையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கே.எம்.சி.எச்., கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சூலூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகள், நல்லட்டிப்பாளையம் மற்றும் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் 10 மையங்களில் நடைபெறவுள்ளன. கோவின் செயலியை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு மையத்தில் தினமும் 100 போ் வீதம் 10 மையங்களில் 1,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும்.

கரோனா தடுப்பூசி போடுவதற்காக 35 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களின் விவரங்கள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்பவா்களுக்கு தடுப்பூசி மையம், நேரம் குறித்த விவரங்கள் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளிகளுடன் பிரதமா் உரையாடுவதற்கு வசதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இரண்டு மையங்களில் வெப்கேமரா பொருத்தப்படுகிறது. தடுப்பூசி போடும் மையத்தில் ஒரு மையத்துக்கு 10 போ் வீதம் 100 பணியாளா்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபடவுள்ளவா்கள் அனைவருக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

28 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்கள் வழங்கப்படும். ஒரு டோஸ் 0.5 மில்லி. கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளை பாதுகாத்து வைக்க அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com