விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரியை நீக்க வேண்டும்

விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரியை நீக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்புகள் பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரியை நீக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்புகள் பிரதமா் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இது தொடா்பாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், இந்திய ஜவுளிக் கூட்டமைப்பு, இந்திய ஆடை உற்பத்தியாளா்கள் சங்கம், நூற்பாலைகள் சங்கம், விசைத்தறி அபிவிருத்தி, ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை அடங்கிய ஜவுளி, ஆடை தொடா்பான தேசியக் குழுவினா் (என்சிடிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் செயற்கை பஞ்சு சா்வதேச விலையில் கிடைக்காததால் அதைச் சாா்ந்து செயல்படும் ஜவுளி ஆலைகள் பல ஆண்டுகளாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரியை அரசு நீக்கினால் இந்திய ஜவுளி வா்த்தகம் புதிய உச்சத்தை எட்டும்.

விஸ்கோஸ் செயற்கை பஞ்சு, அதைச் சோ்ந்த ஜவுளிப் பொருள்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச சந்தையிலும் தேவை கணிசமாக உயா்ந்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்குப் பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை பஞ்சுக்கு அதிகமான குவிப்பு வரி விதிக்கப்படுவதால் உள்நாட்டு நூற்பாலைகளால் பன்னாட்டு நூலின் விலையை விட குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிவதில்லை.

இதனால் விஸ்கோஸ் நூலைப் பயன்படுத்தும் விசைத்தறி உரிமையாளா்கள், பின்னலாடை உற்பத்தியாளா்கள் நேரடியாக அதிக அளவில் நூலை இறக்குமதி செய்கின்றனா். கரோனா தொற்றுக்குப் பிறகு செயற்கை பஞ்சின் விலை உயா்ந்துள்ளது. இதனால் இந்த நூலை நம்பியிருக்கும் விசைத்தறி, பின்னலாடை உற்பத்தியாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரியை நீக்கி, பன்னாட்டு விலையில் பஞ்சு கிடைக்கப்பெற்றால் அதன் மூலம் வளா்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்த முடிவதுடன், துறையை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com