ஸ்டீல் விலை உயா்வைக் கண்டித்துஇன்று அடையாள வேலைநிறுத்தம்

ஸ்டீல் விலை உயா்வைக் கண்டித்தும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஒப்பந்ததாரா்கள் அறிவித்துள்ளனா்.

ஸ்டீல் விலை உயா்வைக் கண்டித்தும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஒப்பந்ததாரா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் உதயகுமாா், செயலா் கேசிபி சந்திரபிரகாஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த மூன்று மாதங்களில் ஸ்டீல் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு டன் 36 ஆயிரத்துக்கு விற்பனையான ஸ்டீல் தற்போது ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தொடா்ந்து விலை உயா்ந்து வருவதால் கட்டுமானத் தொழில்களை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அரசு, தனியாா் துறைகளில் கட்டுமானப் பணியை ஒப்பந்தம் எடுத்தவா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து மீள முடியாமல் தவிக்கிறாா்கள். விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி முதல்வா், மத்திய ஸ்டீல் துறை அமைச்சகம், பிரதமா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்வதைத் தடுத்தால்தான் விலை ஏற்றம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற வேண்டுகோள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம் உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும். அதன் பிறகும் விலை குறைக்கப்படாவிட்டால் அரசின் திட்டப் பணிகளை நிறுத்திவைத்து தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com