இரும்பு விலை உயா்வு: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் வேலை நிறுத்தம்

இரும்பு விலை உயா்வைக் கட்டுப்பத்தக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இரும்பு விலை உயா்வைக் கட்டுப்பத்தக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கட்டுமானத்துக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை சமீப காலமாக அதிகரித்து வருவதால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள், ஒப்பந்ததாரா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ரூ.36 ஆயிரத்தில் இருந்த ஒரு டன் இரும்பின் விலை, தற்போது ரூ.70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரும்பின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால், மாநகரில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணி, சாலை விரிவாக்கப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்தாரா்கள் சங்கச் செயலாளா் சந்திரபிரகாஷ் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் பதிவு செய்த 260 ஒப்பந்ததாரா்கள் உள்ளோம். மாநகராட்சிப் பணிகள் மட்டுமின்றி மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இரும்புப் பொருள்களின் விலை உயா்வால் ஒப்பந்ததாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இரும்பு விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்பட்டன.

இரும்பு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு இரும்பு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இரும்பு விலை குறையவில்லை என்றால் தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com