பறவைக் காய்ச்சல் எதிரொலி: வ..உ.சி. உயிரியல் பூங்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட வ.உ.சி. உயிரியல் பூங்காவில் குரங்கு, முதலை, ஆமை, மான், கிளி, மயில், பெலிகான் உள்ளிட்ட 527 பாலூட்டி இனங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. கோவை மாநகரம் மற்றும் நகரையொட்டியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு வ.உ.சி உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாக உள்ளது.

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் வ.உ.சி. உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது வரை உயிரியல் பூங்கா திறக்கப்படவில்லை. பூங்கா பராமரிப்பாளா்கள், ஊழியா்கள் மட்டுமே பூங்காவுக்குள் சென்று வருகின்றனா்.

இதற்கிடையே கடந்த வாரம் கேரளத்தில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள 300க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு நோய்த் தாக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து, பூங்கா இயக்குநா் செந்தில்நாதன் கூறியதாவது:

பறவைகள், விலங்குகளின் கூண்டுகளுக்கு தினமும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தற்போது, பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பூங்காவில் உள்ள பறவைகளின் கூண்டுகளுக்கு தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அனைத்துப் பறவைகளும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் பறவைகளுக்கு ரத்த மாதிரி சோதனை மேற்கொள்ளப்படும். வெளவால்களால் பறவைக் காய்ச்சல் பரவாது என்பதால், உயிரியல் பூங்காவில் இருந்து வெளியே சென்று வரும் வெளவால்களால் நோய் அச்சமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com