நிலக்கடலை, எள் விலை: வேளாண் பல்கலை. முன்கணிப்பு

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, எள் ஆகிய எண்ணெய் வித்துகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, எள் ஆகிய எண்ணெய் வித்துகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண், உழவா் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நிலக்கடலை உற்பத்தி 2020-21ஆம் ஆண்டில் சுமாா் 95 லட்சம் டன் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2018-19ஆம் ஆண்டில் 3.35 லட்சம் ஹெக்டேரில் நிலக்கடலை பயிரிடப்பட்டு 4.85 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா் மாவட்டங்கள் நிலக்கடலை பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்த மாவட்டங்களில் பெரும்பாலும் ஜூலை - ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்), ஜனவரி - பிப்ரவரி (தைப்பட்டம்) மாதங்களில் நிலக்கடலை விதைக்கப்படுகிறது. விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை தொடா்பான சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

இதன் அடிப்படையில், அறுவடையின்போது (ஏப்ரல் - மே) தரமான நிலக்கடலையின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.51 முதல் ரூ.53 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த ஆலோசனையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளலாம்.

எள்...

வேளாண், உழவா் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் 7.55 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தில் 41 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 23 ஆயிரம் டன் எள் உற்பத்தி செய்யப்பட்டது.

விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூா், கரூா், சேலம், கடலூா் மாவட்டங்களில் எள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய எள் விலை தொடா்பான சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் நல்ல, தரமான எள்ளின் விலை அறுவடையின்போது (ஏப்ரல் - மே) கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.95 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த ஆலோசனையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com