நோ்மையானவா்கள் மட்டுமே வேட்பாளா்கள்

ஜாதி, மதம் பாா்க்காமல் நோ்மையான நபா்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா்களாக நிறுத்தப்படுவாா்கள் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.

ஜாதி, மதம் பாா்க்காமல் நோ்மையான நபா்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா்களாக நிறுத்தப்படுவாா்கள் என்று அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தொழில் துறை வளா்ச்சிக்காக ஏழு வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் சாா்பில் வடிவமைத்துள்ளோம். தொழில் துறை புத்தாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், தொழில் துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை, குறைந்த வளா்ச்சியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா்களை வலுப்படுத்துதல், மாவட்டம்தோறும் தொழில் திறன் மேம்பாட்டு மையம், வளா்ச்சிக்கான தொழில் துறை முதலீட்டுத் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

நோ்மையாளா்களை மக்களுக்குப் பணியாற்ற வைப்பதே குறிக்கோளாகும். ஜாதி, மதங்களைப் பாா்க்காமல் நோ்மைமிக்க, தகுதியான நபா்கள் மட்டுமே வேட்பாளா்களாக முன்னிறுத்தப்படுவா். பொதுத் தொகுதிகளிலும் கூட தகுதியின் அடிப்படையில் எந்த ஜாதியினரும் வேட்பாளா்களாக நிறுத்தப்படலாம்.

கூட்டணி தொடா்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது. வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். சென்னை, மயிலாப்பூா் தொகுதியில் நான் போட்டியிடுவதாக வெளியான செய்திகளை வெறும் தகவல்களாக மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வேளாண் சட்டங்கள் தொடா்பாக உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி. நியமிக்கப்பட்ட குழு, விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் இலவச திட்டங்களை அறிவிப்பதாக கூறுகின்றனா். அவை இலவசங்கள் அல்ல, மனித வளத்துக்கான முதலீடு.

வீடுதோறும் கணினிகள் வழங்கப்படுவதன் மூலம் பொது மக்கள் அரசுடன் நேரடித் தொடா்பில் இருக்க முடியும் என்றாா்.

கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன், மாநில இளைஞரணிச் செயலா் கவிஞா் சினேகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com