வெள்ளலூா் குப்பைக் கிடங்கு: பயோமைனிங் திட்டப் பணிகளில் சுணக்கம்

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்த ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தாமதமாகி வருவதால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்த ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி தாமதமாகி வருவதால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வாா்டுகளிலும் இருந்து தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு மறுசுழற்சிக்காக கொண்டுச் செல்லப்படுகின்றன.

650 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் 60 ஏக்கா் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இந்த குப்பைகளால் வெள்ளலூா் குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம், ஈக்கள் தொல்லையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளலூா் கிடங்கில் உள்ள குப்பைகளில் உள்ள தாதுப்பொருள்களைப் பிரித்தெடுத்து பயோமைனிங் முறையில் குப்பைகளை அழிக்க மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது.

ஆயினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோமைனிங் திட்டப் பணிகள் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியா் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினா் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக முதல்கட்டமாக ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், டிரோன் கேமரா மூலமாக குப்பைகளை அளவீடும் பணியில் ஈடுபட்டனா். இந்த ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு டிசம்பா் மாதம் முதல் பயோமைனிங் திட்டப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 2 மாதங்களாக ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்படாததால், பயோமைனிங் திட்டப் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்பட்டவுடன் பணிகள் துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com