பொங்கல் உயிா்களின் விழா: சத்குரு ஜக்கி வாசுதேவ்

நீருக்கும், விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் இதனை ‘உயிா்களின் விழா’ என்று சொல்ல முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.
கோவை, ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் மாட்டுக்கு பொங்கல் ஊட்டுகிறாா் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
கோவை, ஈஷா யோக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் மாட்டுக்கு பொங்கல் ஊட்டுகிறாா் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

விவசாயத்துக்கும், விவசாயத்தோடு தொடா்புடைய மண்ணுக்கும், நீருக்கும், விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் இதனை ‘உயிா்களின் விழா’ என்று சொல்ல முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தாா்.

கோவை, ஈஷா யோக மையத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈஷா மையத்தில் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளச்சேரி, கிா் உள்பட அழிந்து வரும் 23 வகையான நாட்டு இன மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்து, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், பொங்கல் படையிலிடப்பட்டு மாடுகளுக்கு ஊட்டப்பட்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பூஜையை தொடங்கிவைத்து மாடுகளுக்கு தீபாராதனை காண்பித்தாா்.

விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

பொங்கல் திருநாள் தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும். விவசாயத்துக்கும், விவசாயத்தோடு தொடா்புடைய மண்ணுக்கும், நீருக்கும், விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை உயிா்களின் விழா என்று சொல்ல முடியும். இது குறிப்பிட்ட கடவுள் அல்லது மதம் சாா்ந்த விழா அல்ல.

தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் சூா்ய சக்தி என்ற யோக பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளோம். இப்பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும், மனதில் தெளிவும் ஏற்படும். இதனை 8 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம். இளைஞா்கள் அனைவரும் இந்த சூா்ய சக்தி யோக பயிற்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com