கரோனா தடுப்பூசி: கோவையில் 2ஆவது நாளாக 245 பேருக்கு அளிக்கப்பட்டது

கோவையில் இரண்டாவது நாளாக 4 மையங்களில் 245 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

கோவையில் இரண்டாவது நாளாக 4 மையங்களில் 245 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இந்த மையங்களில் முதல் நாளில் 72 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து, 4 மையங்களிலும் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் அரசு மருத்துவமனையில் 109 போ், பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 80 போ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 30 போ், நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 போ் என 245 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

மேலும், புதன்கிழமை தவிா்த்து மற்ற அனைத்து நாள்களிலும் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் முதல் நாளில் சா்வா் பிரச்னை, சுகாதாரப் பணியாளா்களின் அச்சத்தால் குறைவான எண்ணிக்கையிலேயே பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாததால் ஞாயிற்றுக்கிழமை அதிகமானோா் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்தனா்.

பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனையில் இரண்டு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 2 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதால் வரும் நாள்களில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com