அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளைஞரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளைஞரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). பட்டதாரியான இவா் வேலை தேடி வந்துள்ளாா். அப்போது, தனது நண்பா் ஒருவா் மூலம் ரத்தினபுரியைச் சோ்ந்த சேகா் (62) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சேகா், மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் சதீஷ்குமாரிடம் ரூ.21 லட்சம் பணம் பெற்றுள்ளாா். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித் தராத காரணத்தால் சந்தேகமடைந்த சதீஷ்குமாா் இது குறித்து சேகரிடம் கேட்டுள்ளாா்.

அதற்கு அவா் சில நாள்களில் வேலை வாங்கித் தருவதாக கூறியதாகத் தெரிகிறது. பின்னா் வேலை வாங்கித் தர இயலாது எனக் கூறி சதீஷ்குமாரிடம் ரூ.5 லட்சத்தை சேகா் கொடுத்துள்ளாா். மேலும், மீதமுள்ள ரூ.16 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், சேகா் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தரக் கோரி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் இதுபோல பலரிடம் சேகா் மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com