கோவைக்கு இரண்டாம் கட்டமாக 42,400 தடுப்பூசிகள்: சுகாதாரத் துறை தகவல்

கோவை மாவட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக 42 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக 42 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு, தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா். முதல் கட்டமாக 40 ஆயிரத்து 600 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கோவையில் இதுவரை அரசு, தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். இந்நிலையில் அடுத்தகட்டமாக கோவை மாவட்டத்திற்கு 42 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 5 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் அரசு, தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்குத் தனித்தனியாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

மருத்துவா்கள், செவிலியா், மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாள்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை 41 ஆயிரத்து 500 பேருக்கு 2 தவணைகளில் வழங்குவதற்குத் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவா்களுக்கு தேவையான தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com