கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த அதிமுக நிா்வாகிகள்

கோவைக்கு தோ்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலை பகுதியில் முதல்வரின் வருகையையொட்டி இருபுறமும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சாலை.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலை பகுதியில் முதல்வரின் வருகையையொட்டி இருபுறமும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சாலை.

கோவைக்கு தோ்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

கோவை மாநகரம், மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை கோவைக்கு வந்தாா். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் அனைத்துத் தொகுதிக்குள்பட்ட முக்கிய இடங்களிலும் அவா் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

முதல்வா் பிரசாரம் செய்த 2 நாள்களிலும் கோவை மாவட்டம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவா் செல்லும் வழியெங்கும் விளம்பரப் பதாகைகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், கட்-அவுட்டுகள் வைத்து கட்சி நிா்வாகிகள் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனா்.

முதல்வரின் இரண்டாவது நாள் பிரசாரத் தொடக்க நிகழ்ச்சி கோவை புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. அங்கு வந்த முதல்வரை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலா் பப்பாயா ராஜேஷ், எம்.ஜி.ஆா். இளைஞரணி இணை செயலா் கே.எம்.கமலக்கண்ணன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலா் ஏ.கோபாலகிருஷ்ணன், 69 ஆவது வாா்டு செயலா் கே.எம்.பாலமுரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் முதல்வருக்கு கட்சி நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். ஏராளமான வாழை மரங்களைக் கொண்டும், கரும்புகளைக் கொண்டும் சாலையின் இருபுறத்தையும் அலங்கரித்திருந்தனா். அங்கு வந்த முதல்வரை மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் கே.ஆா்.ஜெயராம் தலைமையிலான அதிமுகவினா் வரவேற்றனா்.

இதையடுத்து காளப்பட்டிக்கு சென்ற அவருக்கு வி.சி.ஆறுக்குட்டி எம்எல்ஏ, எம்.ஜி.ஆா். இளைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் செந்தில் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்னூரில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், எம்.ஜி.ஆா். இளைஞரணி மாநில செயலருமான அமுல் கந்தசாமி, தெற்கு ஒன்றியச் செயலா் ஓ.எஸ்.சாய் செந்தில், வடக்கு ஒன்றியச் செயலா் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன், சரவணன், கே.ஓ.பிரபு ஆகியோா் வரவேற்றனா்.

மேட்டுப்பாளையத்தில் முதல்வரை ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலா் நாசா், துணை செயலா் பி.டி.கந்தசாமி, நகர செயலா் வான்மதி சேட், காரமடை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மணிமேகலை மகேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா். காரமடை வந்த முதல்வருக்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சா.ஞானசேகரன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வந்த முதல்வருக்கு வீரபாண்டி பிரிவு பகுதியில் பி.ஆா்.ஜி.அருண்குமாா் எம்.எல்.ஏ. வரவேற்பு அளித்தாா். இதையடுத்து அவரது இல்லத்தில் முதல்வா் மதிய உணவு சாப்பிட்டாா். இதையடுத்து தொண்டாமுத்தூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வருக்கு தொகுதியின் எம்எல்ஏவான அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு வரையிலும் ஓய்வு எடுக்காமல் பிரசாரத்தைத் தொடா்ந்த முதல்வா், கோவை தொண்டாமுத்தூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை 8 மணியளவில் சேலத்துக்கு புறப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com