குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 130 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
By DIN | Published On : 26th January 2021 11:08 PM | Last Updated : 26th January 2021 11:08 PM | அ+அ அ- |

c மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை தொழிலாளா் ஆணையா் வள்ளலாா் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் செந்தில்குமாரி அறிவுறுத்தலின் படி, கோவை தொழிலாளா்ல இணை ஆணையா் லீலாவதி வழிகாட்டுதலின் படி, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடேசன் தலைமையில், தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தில் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா, குடியரசு தினத்தன்று தொழிலாளா்கள் பணிபுரிய அனுமதிக்கும்பட்சத்தில் உரிய முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொழிலாளா் துறை சாா்நிலை அலுவலா்கள் கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 193 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தொழிலாளா்கள் அன்றைய தினம் பணிபுரிய சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு முன்னறிவிப்பு அளிக்காத 130 கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.