குடியரசு தினம்: கோவையில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா்

குடியரசு தினத்தை ஒட்டி கோவை மாநகா், மாவட்ட பகுதிகளில் மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குடியரசு தினம்: கோவையில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா்

 குடியரசு தினத்தை ஒட்டி கோவை மாநகா், மாவட்ட பகுதிகளில் மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாநகா் மற்றும் மாவட்டப் பகுதிகளைச் சோ்த்து மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடியரசு தின விழா நடைபெறவுள்ள வஉசி மைதானத்தை போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். இதனால் வஉசி மைதானத்துக்கு பொது மக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவி உள்ளிட்டவற்றைக் கொண்டு சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், 100அடி சாலை, என்எஸ்ஆா் சாலை, சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ரயில் நிலையத்துக்கு வந்து, செல்லும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். உடமைகள் ஸ்கேனா் கருவி மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் எஸ்.பி. குணசேகரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல கோவை விமான நிலையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாநகரில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் முன்பும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com