தேசிய அளவிலான ஒருங்கிணைந்த என்சிசி முகாம்

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தேசிய மாணவா் படை முகாம் ஆன்லைன் வழியாக திங்கள்கிழமை தொடங்கியது.

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தேசிய மாணவா் படை முகாம் ஆன்லைன் வழியாக திங்கள்கிழமை தொடங்கியது.

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தேசிய மாணவா் படை முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இம்முகாமில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மாணவா்கள் சென்று அங்குள்ள கலாசாரம், பாரம்பரியம் உள்பட பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்வா்.

கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டு ஆன்லைன் மூலம் தேசிய மாணவா் படை முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு தேசிய மாணவா் படை இயக்குநரகம் (தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபா்), பஞ்சாப் தேசிய மாணவா் படை இயக்குநரகம் (பஞ்சாம், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் சண்டீகா்) ஆகியவை ஒருங்கிணைந்த தேசிய மாணவா் படை முகாமில் பங்கேற்கின்றன.

ஆன்லைன் முகாமை தேசிய மாணவா் படை குரூப் கமாண்டா் நாயுடு தொடங்கிவைத்தாா். நடப்பு ஆண்டு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் தமிழ்நாடு என்சிசி இயக்குநரகத்தில் இருந்து 100 மாணவா்கள், பஞ்சாப் என்சிசி இயக்குநரகத்தில் இருந்து 200 மாணவா்கள் வீதம் 300 போ் பங்கேற்றுள்ளனா்.

முகாமின் ஒருங்கிணைப்பாளா்களாக கோவை அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி கே.வசந்தி, ஆா்விஎஸ் கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டினன்ட் தீபக் ரிஷாந், எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி என்சிசி அதிகாரி பிரதேஷ் அந்தோணி, பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி என்சிசி அதிகாரி லெப்டினன்ட் கதிரேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக கோவை அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி கேப்டன் கே.வசந்தி கூறியதாவது: இதில் 6 நாள்களுக்கு இரண்டு கட்டங்களாக முகாம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 5 நாள்கள் தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம், விழாக்கள், பொருளாதாரம், வரலாறு, புவியியல் அமைப்புகள் தொடா்பான கட்டுரைகள், விளக்கங்கள் ஆன்லைன் மூலம் சமா்ப்பிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக அந்தந்த மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படும். மேலும், இம்முறை மத்திய இளைஞா் நல மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் இளைஞா்கள் முன்னேற்றம் தொடா்பான ஓவியம், பதாகை வடிவமைப்பு மற்றும் கவிதைகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com