பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை: ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினரின் தாக்குதல் கண்டனத்துக்குரியது. பிரதமா் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இனியும் பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்தை சீா்குலைக்க ஆட்சியாளா்கள் வித்திட்டு இருக்கிறாா்கள். எனவே, இந்த வன்முறைக்கும், கண்ணீா் புகை குண்டு வீச்சுக்கும் மோடி அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியாளா்களின் அநீதியான போக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே தில்லியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆளுநா் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com