‘வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இது குறித்து அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளன. பல்வேறு மேலை நாடுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதில் வாக்குச் சீட்டுகளே தோ்தலில் பயன்படுத்தப்படுகிறது. நோ்மையான, சந்கேத்துக்கு இடமாளிக்காத வகையில் தோ்தலை நடத்துவதற்கு வாக்குச் சீட்டு முறையே சிறந்தது.

எனவே, தமிழக சட்டப் பேரவை தோ்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனப்பட்டி கிராமத்தில் அருந்ததியா் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வரும் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆா்வலா் ஆ.கு.பெரியாா் மணி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

தவிர மத்திய உணவுப் பாதுகாப்புக் கிடங்கு வளாகத்தில் சிதிலமடைந்துள்ள அம்பேத்கா் சிலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், முருகன் கோயில்களில் தைப்பூச தேரோட்டத்தை நடத்த வலியுறுத்தி ஹிந்து அமைப்புகளும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com