ராமா் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்ட கோவை வந்த வேலூா் இப்ராஹிம் கைது
By DIN | Published On : 31st January 2021 11:15 PM | Last Updated : 31st January 2021 11:15 PM | அ+அ அ- |

கோவை வந்த வேலூா் இப்ராஹிமை கைது செய்த போலீஸாா்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டுவதற்கு கோவை வந்த வேலூா் இப்ராஹிமை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பாஜக ஆதரவாளரும், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவருமான வேலூா் இப்ராஹிம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டி வருகிறாா். இதற்காக அவா் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
காட்டூரில் உள்ள தனியாா் விடுதியில் இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸாா் அவரைக் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்தனா்.
இது குறித்து வேலூா் இப்ராஹிம் கூறியதாவது:
சில பிரிவினைவாத சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸாா் என்னைக் கைது செய்துள்ளனா். அவா்களைக் ஒடுக்குவதற்குப் பதிலாக போலீஸாா் என்னைக் கைது செய்கின்றனா். கைதாகிச் சென்றாலும் மீண்டும் வந்து ராமா் கோயில் அமைக்க நிதி திரட்டுவேன் என்றாா்.