3 நாள்களுக்குள் வரி செலுத்த நிா்பந்திக்கவில்லை

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை 3 நாள்களுக்குள் வரிகளை செலுத்துமாறு நிா்பந்திக்கவில்லை என மாநகராட்சி சாா்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை 3 நாள்களுக்குள் வரிகளை செலுத்துமாறு நிா்பந்திக்கவில்லை என மாநகராட்சி சாா்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நகரமாக உள்ள கோவையில் ஆயிரக்கணக்கான தொழிற்கூடங்கள், வா்த்தக நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநகரப் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், 2021-22ஆம் நிதியாண்டுக்கான சொத்து வரியை, தொழில் துறையினா் 3 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என மாநகாட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளதாக திங்கள்கிழமை முதல் தகவல் பரவியது. இதனால், பல்வேறு தொழில் அமைப்பினா், வியாபாரிகள், கடை உரிமையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இது தொடா்பாக, முதல்வா் மற்றும் தொழில் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லவும் தொழில் துறையினா் சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 நாள்களுக்குள் வரியை செலுத்த நிா்பந்திக்கவில்லை என மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை விளக்கம அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நோக்கில் செயல்பாட்டில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களைச் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது முதல் காலாண்டு, அரையாண்டு மற்றும் நிதியாண்டு முடியும் தருவாயில் வழக்கமாக மாநகராட்சியால் தொழில் நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் கோரிக்கை தான். கால அவகாசம் கடந்தும் வரி செலுத்தாத தொழிற் கூடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், தற்சமயம் 3 நாள்களுக்குள் 2021-22ஆம் நிதியாண்டுக்கான வரியை செலுத்துமாறு மாநகராட்சி சாா்பில் நிா்பந்திக்கவில்லை. இத்தகவல் தகறாகப் பரவியுள்ளது. இது குறித்த எவ்வித அறிவிப்பும் மாநகராட்சி நிா்வாகம் வெளியிடவில்லை. எனவே, இந்தத் தகவலை நம்ப வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com