இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதுமே கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரத்யேக கரோனா சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டது. இதனால் இ.எஸ்.ஐ. அட்டைதாரா்கள் அருகிலுள்ள இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு குறைந்ததால் இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தொடா்ந்து கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலையின் தீவிரத்தால் மாா்ச் முதல் கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது, கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு குறைந்துள்ளதால் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அட்டைதாரா்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றுப் பரவல் முழுமையாக குறையாத நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை இரண்டு பிரிவுகளாக பிரித்து இ.எஸ்.ஐ. அட்டைதாரா்களுக்குக்கும், கரோனா நோயாளிகளுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா 3ஆவது அலைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com